அப்போது, மணிகண்டன் குடிபோதையில் இருந்ததால், போலீசார் அவர் மீது போதையில் வாகனம் ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் போலீசார் மணிகண்டனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டன் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு போலீசாரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் 200க்கும் மேற்பட்டோர் சடலத்துடன் நேற்று பிற்பகல் வேலகண்டம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
எஸ்ஐ சஸ்பெண்ட்: இந்த சம்பவம் குறித்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் விசாரணை நடத்தி, எஸ்எஸ்ஐ மோகனை, சஸ்பெண்ட் செய்து நேற்றிரவு உத்தரவிட்டார்.
The post போதையில் பைக் ஓட்டிய விவகாரம் போலீசார் தாக்கியதால் வாலிபர் தற்கொலை: நாமக்கல் அருகே காவல் நிலையம் முற்றுகை appeared first on Dinakaran.