பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜனவரி மாதம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக மதுரை, கோவை, சேலம், கடலூர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் சுமார் 53-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில் ஒரு சம்பவத்துக்காக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே வழக்கான விசாரிக்க டிஜிபிக்கு கடிதம் எழுதியதாகவும், அந்த கடிதத்தின் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு விசாரணை அதிகாரியை நியமித்து தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, முதல் தகவல் அறிக்கையின் நிலை என்ன..? என அடிக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த சீமான் தரப்பு வழக்கறிஞர், முதல் தகவல் அறிக்கை(FIR) முடக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனை அடுத்து நீதிபதி எந்த ஒரு விபரங்களும் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்படுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: