*பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
*வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும்.
*ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
*இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடம்.
*இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும்.
*பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்.
*உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்.
*500 ஏக்கரில் வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிக்கப்படும்.
*17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.
*சிறு,குறு விவசாயிகளின் பயனிற்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள்.
*காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப்பாசனப் பகுதிகளிலும் உள்ள “சி” மற்றும் “டி” பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் செய்யப்படும்.
*மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*மின் மேட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
*வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்குதல்.
*திறந்த வெளி பாசன கிணறுகளை புனரமைத்தளுக்கு ரூ.2.50கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*300 கிராமப்புர இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
*வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.
*ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.
*9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
*மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒருங்கிணைத்தளுக்கு ரூ.39.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*துவரம் பருப்பு சாகுபடி குறைந்து வரும் மாவட்டங்களில் 80 லட்சம் ஏக்கரில் துவரை பயிர்விக்க ஊக்குவிக்கப்படும்.
*நகர்ப்புற, கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 % எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கப்படும்.
The post ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்காக சுமை குறைப்பு; மலர்கள் விவசாயத்திற்கு மானியம்; உற்பத்தியை அதிகரித்திட நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு!! appeared first on Dinakaran.