×

சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

சிவகிரி,பிப்.12: சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகிரி அருகே தேவிப்பட்டணம் ஆச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மனைவி பொன்னம்மாள் (73). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த தேவிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து பொன்னம்மாள் அணிந்திருந்த 32 கிராம் எடையுள்ள தங்கநகை மற்றும் அவர் வைத்திருந்த ₹1000 ஆகியவற்றை பறித்துக்கொண்டு ஓடி விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி இன்ஸ்பெக்டர் (பொ) கண்மணி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் ஆகியோர் வழக்கு பதிந்து சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Krishnasamy ,Ponnammal ,Devipatnam Achariyar Street ,Devipatnam ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்