- Mayilam
- முருகன்
- ஸ்ரீஹர்ஷா
- கில் நராமா கிராமம்
- வந்தவாசி தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம்
- சீதலட்சுமி
- செந்தூர் சாலை,
- மயிலம் கிராமம்
மயிலம், ஜன. 1: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, கீழ் நரமா கிராம பகுதியை சேர்ந்த முருகன் மகள் ஸ்ரீஹர்ஷா (5). இவர் பள்ளி அரையாண்டு விடுமுறைக்காக மயிலம் கிராமம் செண்டூர் சாலையில் உள்ள அத்தை சீதாலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் விளையாடி கொண்டிருக்கும்போது வீட்டிற்கு பின்புறத்தில் திறந்த நிலையில் இருந்த 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது தெரியாமல் அனைவரும் குழந்தையைத் தேடி உள்ளனர்.
அப்போது அங்கு திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் தேடியபோது குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
