ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும்

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. முன்னணி நிலவரம் காலை 9 மணி வெளியாகும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 46 பேர் போட்டியிட்டனர். கடந்த 5ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில், 74 ஆயிரத்து 260 ஆண் வாக்காளர்களும், 80 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்தனர்.

இது 67.97 சதவீதம் ஆகும். வாக்குபதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள ‘ஸ்ட்ராங் ரூமில்’ வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. இன்று (8ம் தேதி) காலை 7.45 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, 14 மேஜைகளில் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையானது 16 சுற்றுகள் முதல் 17 சுற்றுகள் வரை நடைபெற உள்ளது. முன்னணி நிலவரம் காலை 9 மணி முதல் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வாக்கு எண்ணிக்கையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post ஈரோடு இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் appeared first on Dinakaran.

Related Stories: