×

கார் வாடிக்கையாளருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணை!!

சென்னை : குறைபாடுள்ள காரை விற்பனை செய்த நிறுவனம், அதற்கு பதில் புதிய காரை வழங்குவதுடன், ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைபாடுள்ள காரை விற்பனை செய்த நிறுவனத்துக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராசிபுரம் அருகே உள்ள தொட்டியபட்டியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் ரூ.20 லட்சத்துக்கு கார் வாங்கி உள்ளார். காரை வாங்கிய 26 நாட்களில் வெளிப்புறத்தில் பல இடங்களில் பெயிண்ட் பூச்சு உதிர்ந்தது. கார் உற்பத்தி நிறுவனத்திற்கு சரவணகுமார் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post கார் வாடிக்கையாளருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணை!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Namakkal Consumer Court ,Rasipuram ,Dinakaran ,
× RELATED இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5...