திருப்பூர், ஜன.10: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (26). இவர் கடந்த 2023ம் ஆண்டு திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த கங்காநகரில் இருந்தபோது அவருக்கு சொந்தமான வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரிடம் லீசுக்குக் கொடுத்துள்ளார்.
ஆனால் மோகன் மற்றும் அவினாசியை சேர்ந்த ராஜேந்திரன் சேர்ந்து அந்த வாகனத்தை பிரவீன்குமாருக்கு தெரியாமலேயே வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. இது குறித்து பிரவீன்குமார் கொடுத்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து ஏற்கனவே மோகனை கடந்த 2023ம் ஆண்டு கைது செய்தனர். இந்த நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரனை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post வாகன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.