கண்ணமங்கலம், ஜன.10: தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடந்த தங்கக்கவச கொடிமரம் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலகில் உள்ள முருகன் கோயில்களிலேயே அதிக உயரமான 21 அடி உயர தங்கத்தேர் உள்ளது. இந்நிலையில், இக்கோயிலில் இருந்த செப்பு கவச கொடிமரம் சீரமைக்கப்பட்டு, தங்கக்கவசம் கொடிமரம் செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், மூலவர் மற்றும் கொடிமரம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர்கள் ராஜீ, சுந்தரராஜன், முருக பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post தங்கக்கவச கொடிமரம் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் appeared first on Dinakaran.