×

அமெரிக்காவில் காட்டுத் தீ: ஹாலிவுட் நடிகர் நடிகைகளின் வீடு எரிந்து நாசம்

லாஸ்ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதிகள் வசதியான மக்கள் வசிக்கும் பகுதியாகும். இந்த பகுதிகளில் உள்ள வீடுகளை காட்டுத்தீ அழித்துள்ளது. இங்கு பெரும்பாலும் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பிற பிரபலங்கள் வசித்து வந்தனர்.

இதில் ஹாலிவுட் பிரபலங்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேமி லீ கர்டிஸ், மார்க் ஹாமில், மாண்டி மூர் மற்றும் ஜேம்ஸ் வூட்ஸ் உள்ளிட்டவர்களின் வீடுகள் எரிந்துவிட்டது. மேலும், இவர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். மூர், கேரி எல்வெஸ் மற்றும் பாரிஸ் ஹில்டன் ஆகியோர் காட்டுத் தீயில் வீடுகளை இழந்ததாகக் கூறினர். ஆடம் பிராடி, லெய்டன் மீஸ்டர், அன்னா பாரிஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களும் தங்களது வீடுகளை இழந்துவிட்டனர்.

The post அமெரிக்காவில் காட்டுத் தீ: ஹாலிவுட் நடிகர் நடிகைகளின் வீடு எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Wildfire in the ,United States ,Hollywood ,Los Angeles ,California ,Cipic Ballysheds ,Hollywood Hills ,
× RELATED ஹாலிவுட் நகரமான லாஸ்ஏஞ்சல்ஸ் 3வது...