×

நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருதுகணேஷ் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்க முன்னோடியான பெரியார் தனது பகுத்தறிவு கருத்துகளாலும், சுய மரியாதை குறித்த கருத்துகளாலும் நாட்டில் பெரிதும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெண் விடுதலைக்காவும் பல்வேறு பேராட்டங்கள் நடத்தி மகளிர் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்காற்றினார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் கடந்த சில நாட்களாக பொது மேடைகளிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பெரியார் குறித்து உண்மைக்கு புறம்பான கீழ்த்தரமான, அருவருக்கதக்க வகையில் பேசி வருகிறார்.

அவரது இதுபோன்ற அநாகரிக பேச்சு நாட்டில் கலவரத்தை தூண்டும் விதத்தில்லும், இருதரப்பினரிடையே மோதல் எற்படுத்தும் விதத்திலும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்திலும், சாதி, மத மோதலுக்கு அடித்தளம் அமைக்கும் விதத்திலும் உள்ளது. அத்துடன் மக்கள் அனைவரும் போற்றக்கூடிய பெரியார் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. எனவே தனது அரசியல் சுயலாபத்திற்காக பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துகள் பரப்பி வரும் சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அதேபோல், திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.உமாபதியும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

The post நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Periyar ,DMK ,Chennai ,DMK State Legal Department ,Deputy Secretary ,Maruthuganesh ,Vepery, Chennai ,Naam Tamilar Party ,Dravidian ,Dinakaran ,
× RELATED பெரியார் குறித்து சீமான் சர்ச்சை அண்ணாமலை ஆதரவு பேச்சு