×

ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில வாலிபர் கைது

பூந்தமல்லி: ஆவடி காவல் ஆணையகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பூந்தமல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார் நேற்றுமுன்தினம் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதன்சுபாகா (25) என்பது தெரிய வந்தது. இவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பூந்தமல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Odisha ,Northern State ,Poonthamalli ,Avadi ,Police Commissioner ,Shankar ,Tamil government ,Avadi Police Commission ,North State ,
× RELATED மேட்டூர் அருகே சோதனைச் சாவடியில்...