- திருட்டானி முருகன் கோயில்
- கிருத்திகை
- திருத்தணி
- முருகன் கோயில்
- கிருதிகி திருவிழா
- மார்கழி
- Mahadeepa
- இறைவன்…
திருத்தணி: திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் மார்கழி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. மகாதீபாராதனையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் மாட வீதி வரிசையில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து அரோகரா பக்தி முழக்கத்துடன் முருகப்பெருமானை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மலைக்கோயிலில் பெண்கள் நெய் தீபம் ஏற்றி வைத்து முருகப்பெருமானை தரிசித்தனர். கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்படிகள் மற்றும் மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
The post திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.