×

பாஜ சர்வாதிகாரத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நல்லகண்ணு நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. நாட்டிற்கு இன்று பல பேராபத்துகள் இருக்கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. தமிழக ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றத்தை தொடர்ச்சியாக 3 ஆண்டு காலம் அவமரியாதை செய்து வருகிறார். சட்டமன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தேசியத்துக்கு எதிராக நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது என்று ஒரு தவறான பிரசாரத்தை பாஜ மேற்கொள்கிறது. தேசியத்துக்கு எதிராக செயல்படுவது பாஜ. அரசியலமைப்பு சட்டத்துக்கு, ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருப்பது பாஜ. அதை மூடி மறைத்து பிறர் மீது பழி போட்டு தாங்கள் தப்பித்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். எல்லோரும் இணைந்து ஒன்றுபட்டு சர்வாதிகாரத்துக்கு எதிராக, பாசிசத்துக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ சர்வாதிகாரத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Mutharasan ,Thiruthuraipoondi ,Thiruthuraipoondi, ,Tiruvarur district ,Communist Party of India ,State Secretary ,Nallakannu ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் இயற்கை நுண்...