திருப்பூர், ஜன.7: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் குழந்தையெனில் ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பெண் குழந்தையெனில் தலா ரூ.25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். இத்தொகை அக்குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.
எனவே, திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் முதிர்வுத்தொகை பெறவேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் சேமிப்பு பத்திரத்துடன், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்களுடன் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நாளை (புதன்கிழமை) முதல் 13ம் தேதி வரை சிறப்பு முகாமானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரை தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்.33ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.