இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து வெற்று மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ள உடல் இயக்க குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் மாற்றுத் திறனாளி மாணவர்களின் விருப்பத்தின் பேரில் செய்முறைத் தேர்வின்போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்தல் வேண்டும்.
மேற்கண்ட மாணவர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் மட்டும் செய்முறைத் தேர்வுக்குபதிலாக அது தொடர்பான கொள்குறி வகை கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வழங்கி தேர்வு செய்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்புகளுக்கு பிப்ரவரி 2ம் தேதி முதல் 14ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும்.பிளஸ்1 வகுப்பை பொருத்தவரையில் பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல்களை பிப்ரவரி 24ம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
The post பிப்ரவரியில் நடத்த உத்தரவு பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் appeared first on Dinakaran.