சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் கிடைத்திட நாளை அனைத்து நியாய விலைக்கடைகள் வழக்கம்போல் செயல்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது.