×

பெண்ணின் உடல் அமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பது பாலியல் குற்றமே: கேரள ஐகோர்ட்

ஒரு பெண்ணின் உடல் அமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பது, பாலியல் வண்ணம் கலந்த கருத்துக்கு சமமே. அது, பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகவே வரும் என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரள மின் வாரியத்தில் பெண் ஊழியர் தனது சக முன்னாள் ஆண் ஊழியர் மீது அளித்த புகாரில், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பல ஆண்டுகளாக தன் உடல் அமைப்பு குறித்து ஆபாசமாக கமெண்ட் அடித்து வருகிறார் என அப்பெண் புகாரளித்திருந்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்நபர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

The post பெண்ணின் உடல் அமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பது பாலியல் குற்றமே: கேரள ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Kerala Electricity Board ,Dinakaran ,
× RELATED பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி...