டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. டெல்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தலைநகரில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி போராடி வருகிறது. மக்களவை தேர்தலை போன்று டெல்லி தேர்தலிலும் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
அதேநேரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜக சார்பில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் கட்சிகள் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
The post நாடே உற்றுநோக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு appeared first on Dinakaran.