கீவ்: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் 2 ஆண்டுகளுக்கும் மேல் போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதல்களில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகள் சின்னாபின்னாக சிதைந்துள்ளன. டொனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பிராந்தியங்களின் சில பகுதிகளை மட்டும் ரஷ்யா கைப்பற்றியது. கடந்த 5 மாதங்களுக்கு முன் உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றியது. உக்ரைனிடம் இருந்து குர்ஸ்க் பகுதியை மீட்க ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்,டொனட்ஸ்க் பிராந்தியத்தில் முக்கிய நகரான குராகோவை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா நேற்று தெரிவித்துள்ளது.
The post உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றிவிட்டோம்: ரஷ்யா அறிவிப்பு appeared first on Dinakaran.