திருவள்ளூர்: 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைகள் 6.35 லட்சம் குடும்பங்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 923 குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 2ம் தேதி முதல் நியாய விலை கடை விற்பனையாளர்களால் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகப்பானது வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும். டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார்களை தீர்வு செய்ய மாவட்ட மற்றும் வட்ட அளவில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 9445394673 என்ற எண்ணில் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
The post 6.35 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.