இந்நிலையில், முனுசாமி என்பவரின் பெயரில் உள்ள பட்டா நிலத்தை கிராம நத்தமாக மாற்ற பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராமு, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது அறிவிப்பு செய்தார். முனுசாமி பெயரில் உள்ள நிலத்தை கிராம நத்தமாக மாற்ற ஆட்சேபனை இருந்தால், 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க பொது அறிவிப்பு செய்திருந்தார். இதனால், பாண்டறவேடு காலனியில் வசித்து வரும் குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணியில் வருவாய் கோட்டாட்சியர் தீபாவை சந்தித்து புகார் மனு வழங்கினர்.
அம்மனுவில், பாண்டறவேடு காலனியில் வீடுகளை கட்டிக்கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் வீடுகள் மற்றும் பயன்படுத்தி வரும் இடத்திற்கு பட்டா கேட்டு நீண்டகாலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். பொதட்டூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராமு, உள்நோக்கத்தோடு தனிநபரின் பெயரில் உள்ள நிலத்தை கிராம நத்தமாக மாற்றம் செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று சென்ட் நிலம் வழங்க இருப்பதாகவும், கூடுதல் இடத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், மனுவின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். முன்னதாக பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவக்குமாரையும் சந்தித்து புகார் மனு வழங்கினர்.
The post பள்ளிப்பட்டு அருகே பட்டா நிலத்தை கிராம நத்தமாக மாற்ற எதிர்ப்பு: கோட்டாட்சியரிடம் புகார் மனு appeared first on Dinakaran.