×

ஆலந்தூர் மண்டல அலுவலகத்திற்கு ரூ.58 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

ஆலந்தூர்: ஆலந்தூர் 160வது வட்ட திமுக சார்பில், சமத்துவ பொங்கல் விழாவையொட்டி கோல போட்டி மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழா, ஆலந்தூரில் நடந்தது. வார்டு கவுன்சிலர் பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், கோல்டு பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் கே.பி.முரளிகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைப்பு செயலாளர் ஆர்.ஏஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு, கோல போட்டியில் வெற்றி பெற்ற 2 பெண்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களையும், 2ம் பரிசு பெற்ற 2 பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும், 3ம் பரிசு பெற்ற 2 பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களையும் வழங்கினர். விழாவில் கலந்து கொண்ட 1500 பெண்களுக்கு குக்கர் மற்றும் புடவைகளை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆலந்தூரில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து உள்ளது.

தனியார் ஆக்கிரமித்து இருந்த ரூ.60 கோடி நிலங்களை மீட்டுள்ளோம். அந்த இடத்தில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் ஆலந்தூர் மண்டல அலுவலகம் கட்ட உள்ளோம். ரூ.16 கோடி செலவில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடக்கிறது. பரங்கிமலை ரயில் நிலையம் அருகே, விபத்துகளை தடுக்க ரூ.3 கோடியே 20 லட்சம் செலவில் நடைமேம்பாலம் அமைக்கப்படும். ஆலந்தூர் தொகுதியில் மட்டும் ரூ.500 கோடி வரை திட்டங்கள் நடந்து வருகிறது,’’ என்றார். விழாவில், நிர்வாகிகள் ஜெயராம் மார்தாண்டன், கலாநிதி குணாளன், சுகுணா, கே.ஆர்.ஆனந்தன், தரணி வேந்தன், பிரவீன் குமார், கவுன்சிலர்கள் சாலமன், செல்வேந்திரன், அமுதப்ரியா, பாரதி குமர், ஜெகதீஸ்வரன், நடராஜன், எம்.ஆர்.சீனிவாசன், வேலவன், கோடீஸ்வரன், ஹார்பர் குமார், காஜா மொய்தீன், சுதாகர், கே.கே.சண்முகம், தீனதயாளன், உதயா கார்த்திக் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

The post ஆலந்தூர் மண்டல அலுவலகத்திற்கு ரூ.58 கோடியில் புதிய கட்டிடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Alandur Zonal Office ,Minister ,Tha.Mo.Anparasan ,Alandur ,Alandur 160th Ward DMK ,Kola competition ,Pongal prize ,Samathuva Pongal festival ,Ward Councilor ,Brindasree Muralikrishnan ,P.Kunalan ,N.Chandran ,Gold Prakash… ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட...