×

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன: ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். ஆளுநர் ரவி வெளியேறிய நிலையில், சபாநாயர் அப்பாவு உரையை வாசித்தார். அப்போது பேசிய அவர்; கிராமப்புறங்களில், மருத்துவம், கல்வி வங்கி மற்றும் நீதி சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சாலை இணைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனை மேம்படுத்த முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் 9,653 கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டின் வேளாண் விளைநிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு என தனி வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, உள்ளிட்ட பல முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில் மேலும் 10,000 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் நோக்கில் திட்டம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு தீர்வு காண ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

ரூ.10 லட்சம் கோடிக்கு மேலான தனியார் முதலீடுகள் இதுவரை ஈர்க்கப்பட்டுள்ளன. பெரம்பலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மின் வாகனங்களின் மையமாக கோவை, ஓசூர் மாறியுள்ளது. முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சை, தருமபுரி, தேனி மாவட்டங்களில் புதிதாக சிப்காட் அமைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. தொழிற்சாலை பணியாளர்களுக்காக வீட்டு வசதி திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் நிறுவியுள்ளார். அதிக அளிவில் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது

2024-ல் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4113 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

The post கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன: ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Governor ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Government ,
× RELATED அரசு பள்ளி மாணவர் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்: தமிழ்நாடு அரசு