×

அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சென்னை: அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு அதிமுக மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post அதிமுக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna University ,Supreme Court ,Adimuka Student Affairs ,Singh Ramachandran ,Koturupuram ,Dinakaran ,
× RELATED அதிமுகவினர் 161 பேர் மீது வழக்குப்பதிவு