×

டீ கடையில் தீவிபத்து

 

பொன்னேரி: பொன்னேரி அடுத்த, பெரியக்காவனம் ரயில்வே கேட் அருகே ரவி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் டீ கடையை திறந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, காஸ் சிலிண்டரை ரவி மாற்றியபோது தீடீரென வால்வு பகுதியில் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்து, கடை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

பின்னர் கடையில் இருந்த ரவி அலறியடித்துக்கொண்டு வெளியே வந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், டீ கடையில் இருந்த சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. ரவிக்கு காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டீ கடையில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Ravi ,Periyakavanam Railway Gate ,Dinakaran ,
× RELATED பூங்குளம் ஊராட்சியில் வீட்டுமனை...