×

திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை: மனைவி பிறந்த நாளில் சோகம்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் துர்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(28). செய்யாறு சிப்காட்டில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு பகுதியை சேர்ந்த தேவி(19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேவி சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று தேவிக்கு பிறந்தநாளாம். இதனால் கோயிலுக்கு சென்று வரலாம் என தேவி அழைத்துள்ளார்.

அதற்கு மணிகண்டன், கம்பெனிக்கு லீவு போட்டுவிடு, கோயிலுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். ஆனால் தேவி கோயிலுக்கு சென்றுவிட்டு கம்பெனிக்கு செல்கிறேன். லீவு போடமுடியாது என்றுகூறியுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேவி கம்பெனிக்கு சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாராம். நேற்றிரவு உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை: மனைவி பிறந்த நாளில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai District ,Brahmadesam Durgayamman Temple Street ,Manikandan ,Cipcott ,Devi ,Kalavai Khodrodu ,Ranipet District ,
× RELATED புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு...