×

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்த போலி வழக்கறிஞர் கைது..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்த போலி வழக்கறிஞர் வினோத்குமார் கைது செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் நிர்வாகி சரவணனிடம் ரூ.2.38 லட்சம் மோசடி செய்த புகாரில் போலி வழக்கறிஞர் வினோத்குமார் கைதாகினார். கிரெடிட் கார்டு மூலம் ரூ.11 லட்சம் பெற்ற சரவணனை வங்கி நிர்வாகம் கடன் தவணையை செலுத்தக் கூறியுள்ளது.

கடன் தவணையை செலுத்த வங்கி நிர்வாகம் வற்புறுத்திய நிலையில் சரவணனுக்கு வினோத்குமார் அறிமுகாகி உள்ளார். தான் ஒரு வழக்கறிஞர், வங்கியில் இருந்து தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். லோக் அதாலத் மூலம் வழக்கு தொடர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காணலாம் எனக் கூறி சரவணனிடம் ரூ.2.38 லட்சம் பண மோசடி செய்தார். சம்மந்தப்பட்ட நிர்வாகி புகார் அளித்த நிலையில் போலி வழக்கறிஞர் கைதாகினார்.

 

The post சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்த போலி வழக்கறிஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,High Court ,Vinod Kumar ,Chennai High Court ,Vinodkumar ,Saravan ,Adimuga ,
× RELATED கட்டிட விதிமீறல்கள் செய்து...