×

தமிழ்நாட்டில் ரூ.53.48 கோடியில் மேல்பால பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் ரூ.53.48 கோடியில் மேல்பால பணிகளை மேற்கொள்ள ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி, ஈரோடு உட்பட 6 மாவட்டங்களில் பல்வேறு சாலை திட்டங்களை மேம்படுத்த ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது ஒன்றிய சாலை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் ஒன்றிய அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் ரூ.53.48 கோடியில் மேல்பால பணிகளை மேற்கொள்ள ஒப்புதல். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.9.22 கோடியில் மேம்பாலம், தரைப்பாலம் அமைக்க ஒப்புதல். பொள்ளாச்சி -தாராபுரம் – கரூர் சாலையில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு. ஈரோடு, முத்தூர், வெள்ளகோவில், புதுப்பை சாலையில் தரைப்பாலம் அமைக்கவும் ஒப்புதல். சிவகங்கை மாவட்டத்தில் ரூ.8.26 கோடியில் மேம்பாலம், அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.89 கோடியில் தரைப்பாலம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.19.47 கோடியில் 2 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல். விருதுநகர் மாவட்டத்தில் ரூ.10.64 கோடியில் மேம்பாலம், தரைப்பாலம் அமைக்கப்பட உள்ளது. CRIF 2024-25ன் கீழ் ஒதுக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் ஆண்டு முழுவதும் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும், கனமழையின் போது ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கும் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்தும். கூடுதலாக, அவை உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்தும், சுமூகமான போக்குவரத்தை எளிதாக்கும் மற்றும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு பின்னடைவை மேம்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் ரூ.53.48 கோடியில் மேல்பால பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Tags : EU ,Minister ,Tamil Nadu ,Delhi ,Union Transport Minister ,Nitin Katkari ,Madurai ,Trichy ,Erode ,Union Minister ,Dinakaran ,
× RELATED மருத்துவ படிப்பு இடங்கள் காலியாக...