×

விக்கிரவாண்டியில் பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 4 வயது எல்கேஜி மாணவி ரியா லக்ஷ்மி நேற்றைய தினம் அங்குள்ள கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையினர் அஜாக்கிரதையாக இருந்த பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தமிழக முதல்வர் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் அறிவித்தார். இந்த நிலையில், சிறுமி ரியா லக்ஷ்மியின் உடல் முந்தியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post விக்கிரவாண்டியில் பள்ளி கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Wickravandi ,Viluppuram ,Rhea Lakshmi ,LKG ,Wickrawandi ,
× RELATED விக்கிரவாண்டியில் பள்ளி கழிவு நீர்...