×

சபரிமலை மண்டல பூஜையில் 32 லட்சம் பேர் தரிசனம்: ரூ.297 கோடி வருவாய்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மண்டல காலத்தில் சபரிமலை கோயிலுக்கு ரூ.297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.214.82 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில் இவ்வாண்டு கூடுதலாக ரூ.82.23 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரவண பிரசாத விற்பனை மூலம்தான் அதிகமாக ரூ.124 கோடி கிடைத்துள்ளது. காணிக்கை மூலம் ரூ.80.25 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13.24 கோடி அதிகமாகும் என அவர் கூறியுள்ளார்.

The post சபரிமலை மண்டல பூஜையில் 32 லட்சம் பேர் தரிசனம்: ரூ.297 கோடி வருவாய் appeared first on Dinakaran.

Tags : Sabarimala Mandala Puja ,Kerala ,Travancore Devaswom Board ,President ,Prashanth ,Lord Ayyappa temple ,Mandala ,Sabarimala ,Mandala Puja ,
× RELATED புல்மேடு, எருமேலி வனப்பாதை வழியாக...