சின்னசேலம் அருகே நடந்த கொலை வழக்கு: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்; கைதான டீ கடை ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்

 

சின்னசேலம், ஜன. 3: சின்ன சேலம் அருகே நடந்த இளம்பெண் கொலை வழக்கில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை நெறித்து கொன்றதாக கைதான டீ கடை ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திம்மாபுரம் வடக்கு காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி நிர்மலா(26). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். செந்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் நிர்மலா திம்மாபுரத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி மாலை பால்சொசைட்டிக்கு பால் ஊற்ற சென்ற நிர்மலா வீடு திரும்பவில்லை. நிர்மலாவை உறவினர்கள் தேடி வந்த நிலையில் திம்மாபுரத்தில் உள்ள வீட்டுக்கு அருகே இருக்கும் சோளக்காட்டில் அரை நிர்வாணமாக நிர்மலா இறந்து கிடந்தார். அவரது உடலிலும் காயங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் கொலையாளியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

அதில் சம்பவம் நடந்த நேரத்தில் செல்போன் சிக்னல் அடிப்படையில் நாககுப்பத்தை சேர்ந்த குமரேசன்(34) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் எஸ்பி ரஜத் சதுர்வேதி உள்ளிட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், குமரேசன் மதுபோதையில் அந்த பெண்னை வழி மறித்து தாக்கி, பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குமரேசனை போலீசார் கைது செய்தனர். கைதான குமரேசன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் கூறியதாவது: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

டைலர் வேலை, சமையல் வேலை செய்து, கடைசியாக நைனார்பாளையத்தில் டீமாஸ்டர் வேலை செய்து வந்தேன். கடந்த 26ம் தேதி வீட்டிற்கு வந்த நான் மாலை 7 மணியளவில் மது அருந்திக் கொண்டு இருந்தேன். அப்போது திம்மாபுரம் காட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த நிர்மலா என்ற விதவைப்பெண் பால் சொசைட்டிக்கு சென்று பால் ஊற்றிவிட்டு திரும்பி வந்தார். அப்போது அவரை வழிமறித்து கையை பிடித்து இழுத்து ஆசைக்கு இணங்கும்படி கேட்டேன். அதற்கு அவர் மறுத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அதனால் அவரை கடுமையாக தாக்கி, கழுத்தை நெரித்து, சோளக்கொல்லையில் இழுத்து மதுபோதையில் பலாத்காரம் செய்தேன். பின் அந்த பெண்னை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டேன். மறுநாள் தான் அவர் இறந்த சம்பவம் தெரிந்தது என்று கூறியுள்ளார். இதையடுத்து நேற்று குமரேசனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற டிஎஸ்பி தேவராஜ், குற்றம் எப்படி நடந்தது என்று போலீசார் முன்னிலையில் நடித்து காட்டி ஆதாரங்களை சேகரித்தனர்.

The post சின்னசேலம் அருகே நடந்த கொலை வழக்கு: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன்; கைதான டீ கடை ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: