×

மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி

 

காங்கயம், ஜன.3: தேசிய மின் சக்தி சிக்கன வார விழாவை முன்னிட்டு, பல்லடம் மின் பகிர்மான வட்டம் சார்பாக, காங்கயம் கோட்டத்தில் நேற்று காலை காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் இருந்து மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு காங்கயம் கோட்ட மின் செயற்பொறியாளர் விமலாதேவி தலைமை தாங்கினார்.

விழிப்புணர்வு பேரணியில் மின் சிக்கனத்தையும், அதன் அவசியத்தையும் வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வாகன ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். துணை மின் நிலையத்தில் தொடங்கி போலீஸ் நிலைய ரவுண்டானா, பஸ் நிலைய ரவுண்டானா வழியாக சென்று சென்னிமலை சாலையில் நிறைவடைந்தது. இதில் அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : on electricity ,Kangayam ,National Electricity Conservation Week ,Palladam Electricity Distribution Circle ,Kangayam-Tharapuram road ,Dinakaran ,
× RELATED தேசிய மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி