×

காயங்களுடன் மயங்கிய வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

 

ஈரோடு, ஜன.3: வெண்டிபாளையம் அருகே ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர், கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு அடுத்த வெண்டிபாளையம் அருகே உடலில் ரத்தக்காயங்களுடன் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக கடந்த 31ம் தேதி தகவல் வந்தது. இதன்பேரில், மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயங்கி கிடந்த வாலிபரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இறந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபரின் உடலில் ஆங்காங்கே ரத்தக்காயங்கள் இருந்ததால், அவரை மர்ம நபர்கள் அடித்ததால் ஏற்பட்ட பாதிப்பினால் இறந்தாரா?, அல்லது வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்தாரா? என்பது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காயங்களுடன் மயங்கிய வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Erode ,Vendipalayam ,Erode… ,Dinakaran ,
× RELATED மது, புகையிலை விற்ற 6 பேர் கைது