கொல்கத்தா: தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடி சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.1,116 கோடி மோசடி நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. கொல்கத்தாவில் 5 இடங்கள் உள்பட 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ரூ.1,000 கோடிக்கு அதிகமான சைபர் மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களை சேர்ந்த பலர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் சுமார் 8 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக் மற்றும் பாகுய்ஹாட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 5 இடங்களிலும், மேலும் மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடந்து வருகின்றன.
The post தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடி சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை! appeared first on Dinakaran.