×

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன் லட்டு பிரசாதம் பகிர்ந்து புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள்


திருமலை: ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய நேற்றிரவு முதல் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். இரவு 11.30 மணியளவில் திருமலை கோயில் மற்றும் மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள் புத்தாண்டை வரவேற்க காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் அனைத்து பக்தர்களும் ஹேப்பி நியூ இயர் எனக்கூறி ஒருவருக்கொருவர் லட்டு பிரசாதம் மற்றும் சாக்லேட் கொடுத்து பகிர்ந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் ஏழுமலையான் கோயில் கோபுரம் அருகே `கோவிந்தா கோபாலா’ என பக்தி பாடல்களை பாடி தரிசனம் செய்தனர். விடிய விடிய திரண்ட பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

₹3.80 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 62,495 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19,298 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ₹3.80 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி ஆங்கில புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறையொட்டி அதிகளவில் பக்தர்கள் திரண்டுள்ளனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் முன் லட்டு பிரசாதம் பகிர்ந்து புத்தாண்டை வரவேற்ற பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : New Year ,Tirupathi ,Eumamalaiaan Temple ,Thirumalai ,Tirupathi Elumalayan Temple ,English New Year's Eve ,Thirumalai Temple ,Matavids ,New Year's Eve ,Tirupathi Eumalayan Temple ,
× RELATED ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு 2025...