அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர். வெளியான பிரச்னையில் ஒன்றியஅரசு முகமை மீதும் விசாரணை: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்திற்கு ஒன்றிய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த முகமையின் விளக்கம் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விவரங்களை மறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கின்றன. அவ்வாறானால், புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அப்போதிருந்து நடந்த எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் இப்படி கசியவில்லையே, இந்த வழக்கில் மட்டும் விவரங்கள் எப்படி கசிந்தது என்ற கேள்வி எழுகிறது.

எனவே, கடுமையான குற்றத்திற்கு காரணமான ஒன்றிய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டும் என்றும், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விவரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர். வெளியான பிரச்னையில் ஒன்றியஅரசு முகமை மீதும் விசாரணை: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: