வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்திய சவுமியா அன்புமணி மீது வழக்கு பதிவு: நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை


சென்னை: அண்ணாபல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்திய பாமகவை சேர்ந்த சவுமியா அன்புமணி உட்பட 271 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து பாமக சார்பில் மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று காலை போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடந்தது. பாமக தலைவர் அன்புமணி மனைவி சவுமியா அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் 40 பெண்கள் உட்பட 297 பேர் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சவுமியா அன்புமணி உட்பட 297 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அனைவரும் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இருந்தாலும் போலீசார் அனைவரையும் விடாமல் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்தனர். பின்னர் நேற்று மாலை கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் போலீசாரின் தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால், பாமக தலைவர் அன்புமணி மனைவி சவுமியா அன்புமணி, மகளிர் அணி செயலாளர் திலகபாமா உள்ளிட்ட 297 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தடையை மீறி ஒன்று கூடியது, சிட்டி போலீஸ் அக்ட் என 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post வள்ளுவர் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்திய சவுமியா அன்புமணி மீது வழக்கு பதிவு: நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: