“திட்டத்தை அறிவித்தால் போதாது; அதனை முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும்” : அமைச்சர் எ.வ.வேலு

சென்னை : “திட்டத்தை அறிவித்தால் போதாது; அதனை முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் இது. கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு அதிமுக ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது; திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு, படுத்து உறங்கிவிட்டு எங்களது திட்டம் எனக் கூறினால் அது சரியல்ல. அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி எதையாவது பேசி வருகிறார்,”இவ்வாறு கூறினார்.

The post “திட்டத்தை அறிவித்தால் போதாது; அதனை முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும்” : அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Related Stories: