×

20 அடி பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி

தேன்கனிக்கோட்டை: இருபது அடி பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்ததில் 2 வாலிபர்கள் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஜவளகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(32), மினி டெம்போ டிரைவர். இவர் அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி திலீப்புடன்(19) நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் தளியில் இருந்து ஜவளகிரிக்கு சென்றனர்.

செல்லோபுரம் ஏரிக்கரை வளைவில் சென்ற போது, திடீரென டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் படுகாயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று காலை உறவினர்கள் தேடிச் சென்றபோதுதான் அவர்கள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post 20 அடி பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Thekkanikottai ,Venkatesh ,Javalagiri ,Thali ,Krishnagiri district ,Dileep ,
× RELATED தளி அருகே சோகம்: பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 வாலிபர் பரிதாப பலி