×

திருவண்ணாமலை மண்சரிவு பகுதியில் நீதிபதி நேரடி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தீபம் ஏற்றும் மலையில் கடந்த 1ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் நேற்று, மண் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன், டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆபத்தான இடங்களில் இன்னமும் மக்கள் வசிக்கின்றனரா, அவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனரா என விசாரித்தார். பின்னர் அவர் கூறுகையில், நீதிமன்றத்துக்கும் அரசுக்கும் மக்களின் உயிர் முக்கியம். எனவே, மண்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்திருக்கிறோம் என்றார்.

The post திருவண்ணாமலை மண்சரிவு பகுதியில் நீதிபதி நேரடி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Mansarivu ,Tiruvannamalai ,Mount Deepam ,Krivalapatha ,Mansarivu ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான...