×

இந்தியா, இலங்கை மக்கள் பங்கு பெறும் கச்சத்தீவு திருவிழா மார்ச் 14ல் துவக்கம்

ராமேஸ்வரம்: இந்தியா, இலங்கை மக்கள் பங்குபெறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா, மார்ச் 14, 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறும் என இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 14ம் தேதி மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் விழா துவங்கிறது. தொடர்ந்து திருச்ஜெபமாலை, இருநாட்டு மக்களும் சேர்ந்து சுமந்து வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறும். இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனியும் நடைபெறும். மார்ச் 15ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்று, பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.

இந்தியாவில் இருந்து எத்தனை பயணிகளை அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசு விரைவில் அறிவிக்கும் என தெரியவந்துள்ளது.

The post இந்தியா, இலங்கை மக்கள் பங்கு பெறும் கச்சத்தீவு திருவிழா மார்ச் 14ல் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Katchatheevu festival ,India ,Sri Lanka ,Rameswaram ,Katchatheevu St. Anthony's Temple festival ,St. Anthony's Temple festival ,Katchatheevu, Sri Lanka ,Christian ,
× RELATED இலங்கைக்கு இந்தியா ரூ.237 கோடி நிதியுதவி