நாகப்பட்டினம்: புதிய கல்லார் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல்(42). இவர் தனது பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சித்தானந்தம்(52), ரத்தினசாமி(43) ஆகியோருடன் நேற்று காலை மீன்பிடிக்க சென்று விட்டு கரை திரும்பி கொண்டிருந்தார். கடல் அலையின் சீற்றம் காரணமாக துறைமுக முகத்துவாரத்தில் படகு மோதியது. இதில் படகு தலைகீழாக கவிழ்ந்தது. படகில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதில் ரத்தினவேல், ரத்தினசாமி ஆகியோர் நீந்தி கரை சேர்ந்தனர். சித்தானந்தம் மட்டும் மாயமானார்.
The post கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது: 2 மீனவர் தப்பினர்; ஒருவர் மாயம் appeared first on Dinakaran.