அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் விஜய்யின் கடிதத்தை துண்டு பிரசுரமாக விநியோகித்து வருகின்றனர். சென்னையிலும் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அதேபோல், கல்லூரி வகுப்பு முடித்து வெளியே வந்த மாணவிகளிடமும் கொடுத்தனர். பூக்கடையில் போலீசார் தரக்கூடாது என மறுத்த நிலையில், போலீசாருடன் தவெக மகளிர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே, பூக்கடையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக தவெக தொண்டர்களை கைது செய்த போலீசார் அவர்களை தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். கைது செய்யப்பட்ட தொண்டர்களை காண பொதுச் செயலாளர் ஆனந்த் அங்கு சென்றார். அப்பொழுது போலீசார் அவரையும் கைது செய்தனர். பின்னர், பொதுச் செயலாளரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர். ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் அமர முயன்றவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post கல்லூரியில் வகுப்பு முடிந்து வந்த மாணவிகளிடம் நோட்டீஸ் வழங்கிய தவெக நிர்வாகிகள்: பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கைது appeared first on Dinakaran.