தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
அதன் தொடர்ச்சியாக ஜனவரி 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
The post தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.