இந்நிலையில், சரவணன் இறந்த தகவலை சில உறவினர்களுக்கு தெரிவிக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக நேற்று முன்தினம் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை செய்தபோது, சரவணன் இறந்த விஷயத்தை உறவினர்கள் சிலருக்கு தெரிவிக்காதது தெரியவந்தது.
இதையடுத்து, அடக்கம் செய்த சரவணணின் உடலை நேற்று தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோனை அறிக்கை வந்த பிறகே, சரவணன் உடல் நிலை பாதித்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என தெரியவரும், என போலீசார் தெரிவித்தனர். இறந்த வாலிபரின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சாவில் மர்மம் என போலீசில் புகார் வாலிபர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: நொளம்பூரில் பரபரப்பு appeared first on Dinakaran.