- புஷ்பா
- ரேவந்த் ரெட்டி
- ஆந்திரப் பிரதேசம்
- துணை முதலமைச்சர்
- பவன் கல்யாண்
- திருமலா
- மங்களகிரி, குண்டூர் மாவட்டம்
- அல்லு அர்ஜுன்
திருமலை: குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: புஷ்பா 2 படம் திரையிடப்பட்ட தியேட்டர் நெரிசலில் சிக்கி பெண் பலியானதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது படம் வெளியாகும்போது முககவசம் அணிந்து தனியாக தியேட்டருக்கு செல்வார். நானும் அதே வழியில் சென்ற காலங்களும் உண்டு. ஆனால் தற்போது நாங்கள் தியேட்டருக்கு செல்வதை நிறுத்திவிட்டோம். இச்சம்பவத்தில் உயிரிழந்த ரேவதி, குடும்பத்தினரை மனிதாபிமானத்துடன் நேரில் சென்று சமாதானம் செய்திருக்க வேண்டும். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. இந்த சம்பவத்திற்கு நான் காரணம் என்றால் முதல்வர் ரேவந்த் ரெட்டி என்னையும் கைது செய்திருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post புஷ்பா பட கூட்டநெரிசலில் பெண் இறந்த விவகாரம் நானாக இருந்தாலும் என்னையும் ரேவந்த் ரெட்டி கைது செய்திருப்பார்: ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் பேட்டி appeared first on Dinakaran.