வாஷிங்டன்: இந்திய வம்சாவளி ஐடி ஊழியர் சுசீர் பாலாஜியின் மரணம் தற்கொலை போல் தெரியவில்லை என்று எலான் மஸ்க் கருத்து தெரிவித்திருப்பதால் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஓபன் ஏஐ’ நிறுவன முன்னாள் ஐடி ஊழியரும், இந்திய வம்சாவளி இளைஞருமான சுசீர் பாலாஜி (26), கடந்த நவ. 26ம் தேதி அவரது சான் பிரான்சிஸ்கோ நகர குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுசீர் பாலாஜியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் பூர்ணிமா ராவ் குற்றச்சாட்டை முன்வைத்தார். அவரது பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அதனால் சுசீர் பாலாஜியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் தனது மகனின் மரணம் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பூர்ணிமா ராவ் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை விபரத்தை, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், இந்திய வம்சாவளித் தலைவர் விவேக் ராமசாமி, இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு டேக் செய்திருந்தார். முன்னதாக கடந்த 4 ஆண்டுகளாக சுசீர் பாலாஜி ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வேலையை ராஜினாமா செய்தார்.
பின்னர், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், பதிப்புரிமை பெற்ற தரவை ஓபன் ஏஐ பயன்படுத்துவதாக சுசீர் பாலாஜி குற்றம் சாட்டினார். இந்த கருத்தை வெளியிட்ட ஒரு மாதத்திற்குள், அவர் இறந்தார். அதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘சுசீர் பாலாஜியின் மரணம் தற்கொலை போல் தெரியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். சுசீர் பாலாஜி கொலை செய்யப்பட்டதாகக அவரது தாயார் குற்றம் சாட்டிய நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவாக எலான் மஸ்க் கருத்து ெதரிவித்திருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post இந்திய வம்சாவளி ஐடி ஊழியர் மரணம் தற்கொலை போல் தெரியவில்லை: எலான் மஸ்க் கருத்தால் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.