×

ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31ம் தேதி திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

கூடுவாஞ்சேரி: ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் 31ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன.

இவற்றை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வருகிற 31ம்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் கூறுகையில், ”வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை விடுவது வழக்கம். தற்போது 2025 ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் 31ம்தேதி பூங்கா திறந்திருக்கும். எனவே, பார்வையாளர்கள் வழக்கம்போல் வந்து விலங்குகளை கண்டுகளித்துவிட்டு செல்லலாம்” என தெரி வித்துள்ளது.

The post ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 31ம் தேதி திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,English New Year ,Uttaravancheri ,English New Year's Day ,Vandalur ,Chennai ,Enlightenment Anna Zoo ,English New Year's Eve ,Zoo ,Dinakaran ,
× RELATED ஆங்கில புத்தாண்டு மட்டுமல்ல… இன்னும்...