×

பட்டாபிராம் டைடல் பூங்கா, விழுப்புரம், தஞ்சை, சேலம், தூத்துக்குடி டைடல் நியோவால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பட்டாபிராம் டைடல் பூங்கா, விழுப்புரம், தஞ்சை, சேலம், தூத்துக்குடி டைடல் நியோவால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “தென் தமிழ்நாட்டின் முதல் டைடல் பூங்கா தூத்துக்குடியில் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி டைடல் பூங்கா, இளைஞர்களுக்கான பாதையை உருவாக்கி, சிறந்த வாய்ப்புகளை வழங்கும். மாநிலம் முழுவதும் உள்ள டைடல் பூங்காக்கள் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன. அனைவருக்கும் சமமான வளர்ச்சியை உள்ளடக்கியதாக திராவிட மாடல் அரசு உள்ளது. வேலூர், திருப்பூர், காரைக்குடியில் வரவிருக்கும் டைடல் பூங்காக்கள் வேலைவாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும்” எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post பட்டாபிராம் டைடல் பூங்கா, விழுப்புரம், தஞ்சை, சேலம், தூத்துக்குடி டைடல் நியோவால் தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Patabram Tidal Park ,Viluppuram ,Thanjai ,Salem ,Tuthukudi Tidal Neo ,Chief Minister ,K. Stalin ,Chennai ,South Tamil Nadu ,Tidal Park ,Tuticorin ,Thoothukudi Tidal Park ,Patapram Tidal Park ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!